நீண்ட காலம் தேவைக்கு அதிகமாக உண்டு வந்ததால், செரிமானம் தடைப்பட்டு வயிறு சரிவர வேலை செய்ய முடியாததால் அமிலத்தன்மை ஏற்படுகிறது.
மற்ற காரணங்கள் குடி, ஒழுங்கற்ற உணவு, புகைபிடித்தல், கண்ட நேரத்தில் பசி இல்லாமல் தேவைக்கு அதிகமாக உண்ணுதல், சரிவர உறங்காமை அல்லது நேரம் தவறி உறங்குதல், எண்ணெய் பலகாரஙகள் மற்றும் மசாலா அதிகமாக உள்ள உணவு, வயிற்று புண், ஹைட்ரோகுளோரிக் அமிலம் உயர் சுரப்பு, இரைப்பை அமிலம் பின்னோக்கி வழிதல், செரிமானக் குறைவு ஆகியவை ஆகும்.
குழந்தைகள் விஷயத்தில், மேற்கூறிய காரணங்கள் மட்டுமின்றி, குழந்தை உண்ண மறுக்கும் போதும் கட்டாயமாக திணித்தல், அதிக நொறுக்குத் தீனீ, பிஸ்கட் ஆகியவையாகும்.
குழந்தைகளிடம் உடல் எடை குறைவு, அடிக்கடி வாந்தி, இருமல், உண்ண மறுத்தல், காய்ச்சல் போன்ற பொதுவான அறிகுறிகள் காணப்படும்.
பெரியவர்கள் அசௌகரியம், நீண்ட நேர நெஞ்செரிச்சல், மார்பு மற்றும் வயிற்று வலி, வயிற்றில் வாயு உருவாக்கம், மார்பு வீக்கம், இரையக உண்குழலிய எதிர்வினை(gastroesophageal reflux), வாயுவால் வயிறு உப்புதல், புளியேப்பம், வாந்தி, பசியின்மை, மலச்சிக்கல், செரிமானமின்மை மற்றும் குமட்டல் ஆகியவற்றை உணரலாம்.
உதடுகள் கறுத்து இருந்தாலும் நாக்கில் வெண்மையான பூச்சு இருந்தாலும் அஜிரணம் உண்டு என அறியவும்.
அமில சோதனை:
கீழ்கண்ட வினாக்களுக்கு நீங்களே விடை கூறினால், உங்களது உடல் நிலை பற்றி அறிந்து கொள்ளலாம்.
அமிலத்தன்மை
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்?
அன்றாடம் அல்லது அதிகமாக கேக், அரிசி, தானியங்கள், கோதுமை ஏற்பாடுகள், இனிப்புகள் போன்ற உயர் கார்போஹைட்ரேட் அடங்கிய உணவு உட்கொள்ளுதல்?
வழக்கமான மசாலா அதிகமான, எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி / உணவு சாப்பிடுவதண்டு?
பழம், கீரை, காய்கறிகளை குறைந்து அல்லது அடியோடு உண்பதில்லை?
தண்ணிர் குறைவாக அருந்துவது?
ஆஸ்பிரின் போன்ற ஆங்கில மருந்தகளை அடிக்கடி உண்பதண்டு?
எப்போதும் கவலை, கோபம், பதட்டமான வாழ்க்கை ?
எந்தவிதமான உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லை ?
பொதுவாக இரவில் கண் முழித்தல், ஒழுங்கான தூக்கம் இல்லை ?
தொலைகட்சி சிரியல் அதிகமாக பார்பதுண்டு ?
காரத்தன்மை
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் இல்லை?
அன்றாடம் அல்லது அதிகமாக கேக், அரிசி, தானியங்கள், கோதுமை ஏற்பாடுகள், இனிப்புகள் போன்ற உயர் கார்போஹைட்ரேட் அடங்கிய உணவு உட்கொள்ளுவதில்லை?
அதிகமாக மசாலா அதிகமான, எண்ணெயில் பொரித்த சிற்றுண்டி / உணவு சாப்பிடுவதில்லை?
பழம், கீரை, காய்கறிகளை அடிக்கடி உண்பதுண்டு?
தினமும் குறைந்தது 2 லிட்டர் நீர் அருந்துவதுண்டு?
ஆஸ்பிரின் போன்ற ஆங்கில மருந்துகளை அடிக்கடி உண்பதில்லை?
கவலையில்லாத நிம்மதியான சந்தோசமான வாழ்க்கை ?
நடப்பது, சைக்கிள் ஓட்டுதல், உடல் உழைப்பு, உடற்பயிற்சி செய்வதண்டு?
தேவையான உறக்கம், நிம்மதியான தூக்கம் ?
தொலைகட்சி சிரியல் அதிகமாக பார்பதில்லை ?
கடுமையான அசௌகரியம் மற்றும் வலி இருக்கும் போது, ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் வலி குறைந்து வாயு வெளியேறி நிவாரணம் கிடைக்கும். மோர் குடித்தாலும் நிவாரணம் உண்டாகும். கீழ்கண்ட மற்ற சிகிச்சைகள் மேற்கொள்ளவும்.
காலையில் வெறும் வயிற்றில் வாயை கொப்பளித்து விட்டு 1.25 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். அதன் பின் பல் துலக்க வேண்டும். வாந்தி வந்தால் எடுத்து விடவும். மலங்கழிக்க வேண்டுமானாலும் போய் வரவும். எக்காரணம் கொண்டும் மருந்து உண்ண வேண்டாம். ஒரே தடவையில் குடிக்க முடியாவிடில் 3-5 நிமிடத்தில் குடிக்கவும். 10 நாட்கள் செய்யவும். முதல் நாளிலிருந்து செய்ய முடியாவிடில், ஒரு வாரத்தில் முயற்சி செய்து தொடங்கவும். அதன்பின் 10 நாட்கள் தொடரவும்.
பத்து நாட்களுக்கு பின், நீரின் அளவை 600-750 மிலி அதாவது 3 தம்ளர் ஆக குறைக்கவும். குடித்தபின், தாடாசன், த்ரயக்தாடாசன், கடிசக்ராசன் ஒவ்வொன்றையும் 5 முறை செய்யவும். இதனால் மலச்சிக்கல் ஒழியும். பானை வயிறு கரையும். ரத்தம் சுத்தியாகும். இதனை உடல் சரியான பின்பும், தினமும் தொடரவும்.
அத்துடன் அருகம்புல் சாறு ஒரு தம்ளர் அருந்தவும். இவ்வாறு 15 நாட்கள் செய்யவும்.
அருகம்புல் வளரும் ஒரு சுத்தமான இடத்தை தேடவும். பசுமையான புல்லை ஒரு கை நிறைய கிள்ளவும். நன்கு சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டவும். சிறிது நீர் ஊற்றி மிக்ஸயில் போட்டு 2-3 நிமிடம் ஓட்டவும். பின் சுத்தமான ஈரத் துணியாலே வடிகட்டி, சமபங்கு நீர் சேர்த்து அருந்தவும். அம்மியிலும் அல்லது கல்வத்திலும் செய்யலாம். புல்லை தேட முடியாவிட்டால், பிள்ளையார் கோயில் முன் விற்பதையும் வாங்கி உபயோகிக்கலம். வெளியில் விற்கும் சாற்றை உபயோகிக்க வேண்டாம்.
இதனால் அமிலத்தன்மை முழுவதும் சரியாகும். பெண்களின் மாதாந்திரத் தொல்லைகள் தீரும். தொடர்ந்து உபயோகித்தால் வெண்குஷ்டம் குறையலாம்.
சாற்றை அருந்தியபின், 1-2 மணிநேரம் எந்த உணவையும் உண்ண வேண்டம். பதினைந்து நாட்கள் தொடரவும்.
1. பதினைந்து நாட்களுக்கு பின், ஒரு தம்ளர் வெந்நிரில் ஒரு எழுமிச்சம் பழத்தை பிழிந்து சருக்கரை உப்பு எதுவும் சேர்க்காமல் அருந்தவும். இத்துடன் ஒரு தேக்கரண்டி 'Agmark' தேனையும் சேர்த்து உண்ணலாம். பத்து நாட்களுக்கு பின், தேனை சேர்க்காமல் காலை சிற்றுண்டிக்குப் பின் அருந்தலாம். மதியம் உணவுக்குப்பின், மோர் அல்லது நீருடன் எழுமிச்சம் பழ சாறு சேர்த்துக் கொண்டால், நன்கு ஜிரணம் ஆவதுடன் அமிலத்தன்மை கட்டுப்படும்.
2. ஞாயிற்றுகிழமை மட்டும் வெண்பூசணி அ வாழைத்தண்டு அ சுரைக்காய் சாறு அரை தம்ளர் சமபாகம் நீர் சேர்த்து அருந்தலாம். இளநீரும் உட்கொள்ளலாம். மற்றவைகளை நிறுத்தி விடலாம். வாழைத்தண்டு சாறு குடிப்பதால் கிட்னி கல் வெளியேறும்.
3. இதன்பின், 15 நாட்களுக்கு, காலையில் வெறும் வயிற்றில் வில்வம், வேப்பிலை கொழுந்து, துளசி சில இலைகளை மென்று தின்றால், அஜிரணம், அல்சர் ஆகியவை சரியாகும்.
4. சில நாட்களுக்கு பின், சிறிது இஞ்சியை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி தேனில் ஊற வைக்கவும். மூன்று நாட்களுக்கு பின் காலை, மதியம் உணவுக்கு முன் ஒன்றிரண்டு துண்டுகள் உட்கொள்ள ஜிரணசக்தி அதிகமாகும். இரவு உணவுக்கு பின் சற்று கடுக்காய் சூரணத்தை தேனில் குழைத்து உண்ண, மலச்சிக்கல் நீங்கும்.
5. வாரம் இருமுறை, சாத்துக்குடி அல்லது ஆரஞ்சு சாறு மட்டும் அருந்தி உபவாசம் இருக்கவும். முடிந்தால் முழுநாள் உபவாசம் இருக்கலாம்.
6. உணவு உண்பதற்கு அரை மணி முன்னும் பின்னும் நீர் அருந்த வேண்டாம். தாகம் என்றால் தேவையான அளவு நீர் அருந்தவும்.
7. மைதாவினால் செய்த உணவுப்பண்டங்கள், கோக், பெப்சி போன்ற பானங்கள், எண்ணெய் பலகாரங்கள், கேக் போன்ற பேக்கரி உணவு, வாழைக்காய், கிழங்கு வகைகளை தவிர்க்கவும்.
8. இரவு உணவு 8 மணிக்கு முன் முடித்தால் ஜிரணிப்பதற்கு சற்று நேரம் கிடைக்கும்.
9. உணவுக்கு பின் 10 நிமிடம் வஜ்ராசனத்தில் அமர்ந்தால் நன்கு ஜிரணமாகும். முடியாதவர்கள் பாயில் தலையணை இல்லாமல் படுத்து, கால்களை நன்கு மடக்கி 10 நிமிடம் இருக்கலம்.
10. படுப்பதற்கு அரைமணி முன்பு ஒரு அவுன்சு குளிர்ந்த பாலில் ஒரு தேக்கரண்டி தேனை கலந்து உண்ண அமிலத்தன்மை குறையும்.
11. இரவில் தேவையான அளவு நிம்மதியாக தூங்கவும். பகல் தூக்கத்தை தவிர்க்கவும்.
12. இரவில் தூங்கும் போதும், பகலில் ஓய்வு எடுக்கும் போதும், இடது புறம் ஒருக்களித்து படுக்கவும்.
13. தினமும் காலையில் யோகா, செய்யவும். மாலையில் குறைந்தது 2/3 கி.மி. வேகமாக நடக்கவும்.
14. தினமும் காலையில் பிராணயாமம் செய்யவும். அல்லது கண்களை முடி நீண்ட மூச்சு எடுக்கவும். மூச்சிலேயே கவனம் செலுத்தவும். வேலை செய்யும் போதும் இதை செய்யலாம்.
15. வீட்டிலும், அலுவகத்திலும், கவலை, பதற்றம், மன அழுத்தம் ஆகியவறறை குறைக்கவும். உங்களால் முடிந்த மட்டும் செய்துவிட்டு கடவுள மேல் பாரத்தை போடவும். சிறிது நேரம் குழந்தைகளுடன் விளையாடவும். உங்களுக்கு பிடித்தமான கர்நாடக அ ஹிந்துஸ்தானி இசையை கேட்கவும்.
16. ஒரு தொட்டியில் அமர்ந்து, தொப்புள் வரை குளிர்ந்த தண்ணீர் விடவும். வயிற்றை லேசாக பிசைந்து விடவும். சுமார் 10 நிமிடங்கள் வரை அப்படி அமர்ந்திருக்கவும். இதை காலையில் வெறும் வயிற்றில் செய்யவும். மாலையில், 10 - 15 நிமிடங்கள் வரை, ஒரு பக்கெட்டில் கணுக்கால் அளவு குளிர்ந்த நீர் விட்டு கால்களை வைத்திருக்கவும்.
17. உண்ணுவதற்கு முன், கால்களை கழுவி ஈர கால்களுடன் அமர்ந்து உண்ணவும்.
உங்களுக்கு சிறு வயதிலிருந்தே பழக்கமான எளிய பாரம்பரிய உணவு உட்கொள்ளவும். உணவு அரை வயிறு, தண்ணீர் கால் பங்கு, மீதி காலியாக விடவும். கூடுமானவரை, அசைவ உணவு குறிப்பாக ஆட்டிறைச்சி மற்றும் கோழி நுகர்வை தவிர்க்கவும் அல்லது குறைக்கவும். அசைவ உணவை இரவில் முற்றிலும் தவிர்க்கவும். முட்டை உண்பதை அறவே தவிர்க்கவும்.
உணவை ஒழுங்காக மென்று நிதானமாக உண்ணவும். இதனால் எச்சில் உணவுடன் சேர்ந்து செரிமானம் நன்கு நடக்கும். உணவுக்குப்பின், அரைமணிநேரம் கடின உடல் வேலை செய்வதை தவிர்க்கவும்.
கிழங்கு வகைகள் (கருணை தவிர), வாழைக்காய், சர்க்கரைவள்ளி கிழங்கு, மரவள்ளி கிழங்கு, காரமான உணவு, எண்ணெயில் வறுத்த பொருட்கள், கோக், பெப்ஸி, கேக் ஆகியவற்றை தவிர்க்கவும். ஞாயிறு மற்றும் பிற விடுமுறை நாட்களில், உணவுக்கு இடையே நொறுக்குத்தீனியை தவிர்க்கவும். குடிப்பழக்கத்தை தவிர்க்க அல்லது குறைக்கவும்.
விருந்துகளில் மிதமாக உண்ணவும். மதுவை தவிர்க்கவும். விருந்துககுபின் ஒரு டீ ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு கலந்து உண்ணவும். அதனுடன் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
வாரம் ஒரு நாள் உண்ணவிரதம் உதவும். விரதத்தின் போது, இளநீர் அல்லது சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை சாறு சற்று நீர் கலந்து பருகவும். இதனால், செரிமானம் மேம்படும் மற்றும் உடலில் ஆற்றல் அதிகரிக்கும். வெள்ளரியை பச்சையாக உண்ணவும். வயிற்றுப்புண் இருந்தால் வெள்ளரி தவிர அனைத்து சாலடுகளையும் தவிர்க்கவும். பழங்களையும் சாறாக பருகவும்.
சில உணவு வகைகளின் குணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
மீன், கோழி, அனைத்துவிதமான அசைவ உணவுகள், முட்டை, சீஸ், கோதுமை போன்ற தானியங்கள், ஓட்ஸ், அரிசி, சோளம், கொழுப்பு மற்றும் கொழுப்பு பொருட்கள், வறுத்த உணவு, முந்திரி, வேர்க்கடலை, பிஸ்தா, வாதுமை கொட்டை வகை போன்ற கொட்டைகள், கொப்பரை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், தேயிலை, காபி, மது பானங்கள், கோலா, இனிப்புகள், வாழைக்காய், சர்க்கரை கிழங்கு, மரவள்ளி கிழங்கு, சர்க்கரை, கரும்பு, மாப்பிள் சிரப், பதப்படுத்தப்பட்ட தேன், அஸ்பார்டேம், உப்பு, கடுகு, ஜாதிக்காய், சோயா சாஸ், வினிகர், இனிப்புகள், ஆங்கில மருந்துகள், புகையிலை.
பச்சை காய்கறிகள், பயறுகள், பீட் ரூட், முட்டைக்கோஸ், காலிபிளவர், வெள்ளரி, வெங்காயம், தக்காளி, அனைத்து பழங்கள் மற்றும் பழ சாறுகள், கீரைகள், வெண்ணெய், பால், பாதாம், தேங்காய், முள்ளங்கி, சோயா, ஆளி விதை, எள் போன்ற விதைகள், தேன், பழுப்பு அரிசி.
ஓடி விளையாடு பாப்பா உன கவி பாரதியார் கூறிய வார்த்தையை நினைவு கூறவும்.
யோகா பயிற்சி பழக்கமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட புத்தகங்களிருந்து சில ஆசனங்கள் பயிற்சி செய்யலாம். மேலும், பிராணயாமம் யோகா இணைந்து தொடர்ந்து செய்ய வேண்டும்.
மற்றவர்கள், ஒரு தகுதியான யோகா ஆசிரியரிடம் கற்றுக் கொள்ளவும். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள பயிற்சி மையம்மொன்றில் கற்றுக்கொள்ளவும்.
உடற் களைப்பு மற்றும் மனக் களைப்பை நீக்க 10 நிமிடம் சவாசனம் செய்யவும். கவனத்தை உடல் மீதும் மூச்சிலும் வைத்திருக்கவும். சுற்றுப்பறத்தில் அதிக சத்தம் இருந்தால், காதில் பஞ்சை வைத்துக கொள்ளவும்.
முத்திரை உடல் நாடிகளை கட்டுப்படுத்தும். இது சீன அஃகு ப்ரஸர் போன்றது. உடலில் 72,000 நாடிகள் உள்ளன, அது அனைத்தையும் கட்டுப்படுத்துவது கடினம். யோகிகள் 10 முக்கிய நாடிகள் மூலம் உடலை கட்டுப்படுத்த முடியும் என அறிந்து முத்திரைகளை அறிமுகப்படுத்தினர்.
அமிலத்தன்மை போக்குவதற்கு பின்வரும் முத்திரைகள் முக்கியம். தினசரி இவற்றைசுமார் 10-15 நிமிடங்கள் செய்யவும். சுகாசனம், பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்யவும். மூட்டு வலி உள்ளவர்கள், கீழே அமர முடியாதவர்கள், காலை மடக்க முடியாதவர்கள், நாற்காலியில் அமர்ந்து முதுகை நேராக வைத்துக் கொண்டு செய்யவும். ஒரே முறையில் செய்ய முடியாவிடில், காலை 6.00, மதியம் 12.00, மாலை 6.00 மணிக்கு செய்யவும்.
சரியாக அமர்ந்து, கண்களை மூடிக் கொண்டு அபான முத்ரா, அபான வாயு முத்ரா, ப்ருதவி முத்ரா ஆகியவை செய்யவும். உபயோகத்தில் இல்லாத விரல்களை நேராக வைத்துக் கொள்ளவும். முழுப் பயன் பெற கவனத்தை, உடலிலும், மூச்சிலும் செலுத்தவும்.
ப்ருத்வி முத்ரா
அபான முத்ரா
அபான வாயு முத்ரா
மஞ்சள், நீலம் மற்றும் இண்டிகோ ஆகிய மூன்று வண்ண கண்ணாடி பாட்டில் எடுத்துக் கொள்ளவும். 2-3 அவுன்ஸ் அளவு இருந்தால் போதும். சிறிய பாட்டில்கள் கிடைக்கவில்லை என்றால் பெரிய பாட்டில்கள் பயன்படுத்தலாம். சிறிய பாட்டில்கள் அடிக்கடி விமானத்தில் வெளிநாடு செல்வோர் அல்லது மது அருந்துவோரிடம் கிடைக்கலாம். இல்லாவிடில் கடையில் வாங்கிக் கொள்ளவும்.
முதல் நாள் நீரை, மஞ்சள் நிற பாட்டிலில் நிரப்பி சுமார் நான்கு மணி நேரம் சூரிய ஒளி வைத்து. காலை மற்றும் மாலை உணவு பிறகு தண்ணீர் ஒரு அவுன்ஸ் சாப்பிடவும். அடுத்த நாள் நீல நிற பாட்டிலை பயன்படுத்தவும். மூன்றாம் நாள் இண்டிகோ நிற பாட்டிலை பயன்படுத்தவும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி செய்யவும். ஒரு மாதம் வரை இதை தொடர்ந்து செய்யவும். நீரை தினமும் மாற்றி விட்டு, சூரிய ஒளியில் வைக்க வேண்டும்.
நாள்பட்ட அல்சர், வயிற்றுப்போக்கு, வயிற்று கடுப்பு ஆகியவற்றுக்கு மேலும் ஒரு மாதம் அல்லது சுகாதார நிலை சரி வரும் வரை நீல நிற பாட்டிலில் இருந்து தண்ணீர் குடித்து சிகிச்சையை தொடர வேண்டும்.